Dr. Ambedkar Chair
Bharathidasan University, Tiruchirappalli - 620 024
Tamil Nadu, India
 

About Dr. Ambedkar Chair

Babasaheb Dr. B.R. Ambedkar (14 April 1891 – 6 December 1956) was a great National Leader of Twentieth Century. He was an intellectual, scholar, statesman and contributed greatly in the nation building. He led a number of movements to emancipate the downtrodden masses and to secure human rights to millions of depressed classes. He has left an indelible imprint through his immense contribution in framing the Modern Constitution of India. He stands as a symbol of struggle for achieving the Social Justice. Therefore, setting up of Chairs in Universities in his memory is a befitting tribute to this illustrious Son of India. The main objective of this Scheme is to provide well-equipped Centres of learning to intellectuals, academicians and students to undertake studies and research with an intention to understand, assess and disseminate ideas and thoughts of Dr. B.R. Ambedkar particularly on subjects like Economics, Political Science, Religion, Philosophy, Constitutional Studies, Education, Social Work, Human Rights as well as other disciplines considered relevant for attainment of our National Goal of Social Justice.

Functions

Broadly the Chairs will serve as Centres of learning and research not only on the subjects concerning Dr. Ambedkar's Works and Philosophy, but also on the issues concerning the socio-economic and cultural life of Scheduled Castes, Scheduled Tribes, Minorities, Backward Classes and other Weaker Sections of the Society. In pursuance of these objectives, the Chairs will undertake research for understanding and disseminating the ideas of Babasaheb Ambedkar. These objectives shall be achieved not only by conducting research and teaching, but also by organizing Seminars, Symposia, Workshops and other similar academic activities

News and Events

ஆகச் சிறந்த கல்வியாளர் டாக்டர் அம்பேத்கர்

சட்டமேதை, பொருளாதார வல்லுநர், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை, சமூகவியலாளர், வழக்கறிஞர், எழுத்தாளர், இதழியலாளர், அரசியலாளர் போன்றன டாக்டர் அம்பேத்கருக்கு வழங்கும் பட்டங்கள். இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆகச் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் அம்பேத்கர். கல்விக்கும் அவருக்குமான நெருக்கம் மிகப் பரவலாகப் பேசப்படாமலேயே உள்ளது. கல்வியாளர் என்ற அடிப்படையில் மூன்று படிநிலைகளைில் அம்பேத்கரின் கல்வியல் சிந்தனையை வகைப்படுத்தலாம். படிப்பு, வாசிப்பு மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு என்பனவாகும்.

படிப்பு: அம்பேத்கரின் தந்தை இராணுவத்தில் பணியாற்றி அம்பேத்கரின் இரண்டு வயதில் ஓய்வு பெற்றவர். அம்பேத்கரின் தாயார் அவரது ஐந்து வயதில் இறந்துவிடுகிறார். அம்பேத்கர் தொடக்கக்கல்வியை தபோலியில் தொடங்குகிறார். பின்னர் மும்பை சதாராவில் சேர்ந்து படித்தார். அம்பேத்கரின் தந்தை "கேடில்லா விழுச்செல்வமாகிய" கல்வியை மகன் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். அதன்படியே அம்பேத்கர் உயர்கல்வியினை மும்பை எல்பின்ஸ்டன் பள்ளியில் நிறைவு செய்தார். 1907-ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் "மஹர்" இனத்திலிருந்து (பிற்படுத்தப்பட்ட) தேர்ச்சி பெற்ற முதல் மாணவர் என்ற பெருமைக்குரியவரானார். அச்சமயம் அவருக்குப் பல பாராட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன. இத்தருணத்தில் மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியிலே பி.ஏ. பொருளாதாரம் (1912-ல்) முடித்தார். பின்னர், பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியினால் அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொருளாதாரம்(1915) படித்தார் ("பண்டைய இந்திய பொருளாதாரம்"). பின்னர், 1916-ல், "இந்தியாவின் ஆதாயப்பங்கு, - ஒரு வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம்" என்ற ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெறுகிறார். அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர். பின்னர், 1921-ல், இலண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுகிறார் ("பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல்" ) 1922-ல் " ரூபயின் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்" என்ற புகழ் மிக்க ஆய்வுக்கட்டுரையை எழுதினார். இதற்காக இலண்டன் பல்கலைக்கழகம் Doctor of All Science என்ற பட்டம் அளித்து அம்பேத்கரைப் பெருமைப்படுத்தியது. இதுவரை உலகில் யாரும் இப்பட்டத்தைப் பெறவில்லை. அதே சமயம் இலண்டன் சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்து "பாரிஸ்டர்ஸ பட்டம் பெறுகிறார். 1935-ல் இவர் எழுதிய "விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்ற நூல் இன்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. இவரது "கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும் ""ரூபாயின் சிக்கல்களும் அதன் தீர்வும்" போன்ற ஆய்வுக்கட்டுரைகளைக் அடிப்படையாகக் கொண்டும் கில்டன்யங் என்ற ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையிலும் 1935 –ல் ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. 1952-ல் அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
"ஒரு மனிதரை அச்சமற்றவராக மாற்றி ஒற்றுமையின் படிப்பினையைக் கற்பித்துத் தன்னுடைய உரிமைகள் குறித்த விழிப்புணரவை ஏற்படுத்தித் தன்னுடைய உரிமைக்காகப் போராடும் உணர்வை ஊட்டுவதே கல்வி" என்றார். மேலும், "சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நீதியையும் அறநெறிகளையும் உருவாக்கக் கூடியதையே அவர் கல்வி என்றழைத்தார்.

வாசிப்பு: "புத்தகங்களுக்காக ஒரு வீடு" என்று ஏங்கிய ஒரு மனிதர் இருந்தார் என்றால், அது அம்பேத்காரைத் தவிர வேறு யாருமில்லை. அதன் விளைவாய மும்பயைில் கட்டியதுதான் "ராஜகிரகம்" எனும் வீடு அல்ல நூலகம். அங்கு இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 69000 என்ற செய்தி நம்மை வியக்க வைக்கின்றது. அன்றைய ஆசியத் துணைக்கண்டத்தில் அம்பேத்கருடையதுதான் மிகப்பெரிய தனிநபர் நுஸலகமாக விளங்கியது. தமிழகத்தைச்சேர்ந்த இருவரின் நூல்களும் அங்கிருந்தன. ஒருவர் சென்னைப் பேராசிரியர் பி.லட்சுமி நரசு ("தி எஸ்ஸென்ஸ் ஆப் புத்திசம்") மற்றொருவர் நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.சிதம்பரம் ("ரைட் ஆப் டெம்பிள் என்ட்ரி").
"நூலகம் என்பது புத்தகங்களை சேமித்து வைக்கும் இடம் மட்டுமல்ல. சாதி, மதம், இனம், மொழி போன்ற வித்தியாசங்களைக் கடந்து சகோதரத்துவத்தை வளர்க்கும் ஒரு சமூக அமைப்பாக விளங்க வேண்டும்" என்று விரும்பினார். "புத்தகம் இல்லாத வீடு என்பது ஜன்னல் இல்லாத அறை போன்றது" என்ற அறிஞர் பிளேட்டோவின் கருத்து நினைவு கூரத்தக்கது. வாசிப்பினை நேசிப்பாக மட்டுமல்ல சுவாசிப்பாகவே கொண்டு வாழ்ந்தவர் டாக்டர் அம்பேத்கர்.

சமூக பங்களிப்பு: 1925-ல் "பகிஷ்கிரித் ஹித்தகாரிணி சபை "யினை தோற்றுவித்து அதில் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். பின்னர், "மக்கள் கல்விக் கழகம்” ஒன்றை ஏற்படுத்தி அனைவருக்கும் கல்வி அளித்தல் என்பதைக் கொண்டுவந்தார். பெண் கல்வியை வலியுறுத்தினார். மும்பையில் "சித்தார்த்தா" என்ற கல்லூரியை ஏற்படுத்தினார். வசதியற்றோர், பிற்படுத்தப்பட்டோர் தங்கிப் படிப்பதற்காக பல விடுதிகளை உருவாக்கினார். இதனைப்போன்று கல்லுரியினையும் விடுதியையும் அவுரங்காபாத்திலும் உருவாக்கினார். தலைசிறந்த அரசியலர்களை உருவாக்குவதற்காக (Training School of Entrance of Politics) 1956-ல் நாக்பூரில் பள்ளியை நிறுவினார். இங்கு, மேடைப்பேச்சுக்கலை, பௌத்த தத்துவப் பார்வை, சமூக அறிவியல் பாடங்கள், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவை கற்பிக்கப்பட்டன. மேடைப்பேச்சுக்கலை குறித்த சிறப்பு வகுப்பை அம்பேத்கர் 1956-ல் டிசம்பர் 10 அன்று நடத்தவிருந்தார். ஆனால் டிசம்பர் 6ம் தேதி உயிர் துறந்தார்.
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட பெரிய படிப்பாளி யாரும் கிடையாது. அதிக பட்டங்களை ஆய்வு செய்து வாங்கியவர் யாரும் கிடையாது. இடைவிடாது படிப்பு. இறக்கும் வரை படிப்பு! ஆழ்ந்த வாசிப்பு! அதிகப்படியான வாசிப்பு! அயராத உழைப்பு! "அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! மானிட சமுத்திரம் நானென்று கூவு! ” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பி டாக்டா் அம்பேத்கர்.