மையம் ஓர் - பார்வை (About the Centre)
பாரதிதாசன் பல்கலைக்கழகமானது சிறந்த பகுத்தறிவுவாதி தந்தை பெரியார் அவர்களுக்கென்று 2000 - ஆம் ஆண்டு பெரியார் உயராய்வு மையத்தைத் தோற்றுவித்தது. அன்று முதல் பல முனைவர்பட்ட ஆய்வாளர்கள்; பெரியாரைப் பற்றி ஆய்வு செய்து முனைவர்பட்டம் பெற்று வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் தந்தை பெரியாரின் பிறந்தநாளையும் பெரியார் பெயரில் பெரியாருக்காகத் தொண்டு செய்யும் பெரியாரிஸ்டுகளுக்கு பெரியார் சிறப்பு விருது ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) மற்றும் பெரியார் விருது ரூபாய் 50,000 (ஐம்பதாயிரம்) பொற்கிழியினையும், பெரியார் பற்றி புத்தகம் எழுதிய ஒருவருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் நமது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பல கருத்தரங்கங்களும், பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.
பெரியாரின் கருத்துகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் முனைப்பில் பெரியார் உயராய்வு மையமும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளும் இணைந்து 2015-ஆம் ஆண்டு முதல் பெரியார் பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மையத்தில் 18000 நூல்கள் அமையப்பட்டுள்ளது. இம்மையத்தின் இயக்குநராக 2013 முதல் முனைவர் அ. கோவிந்தராஜன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.