மின்னணுச் சுவடிக் காட்சியகம்

(Digital Manuscript Gallery)

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

Untitled Document

   
தமிழ்க் கருவூலங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பாரதிதாசன் பல்கலைக் கழகம் இத்தகு சுவடிக்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது. சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று முழங்கினான் பாரதி. அந்த வகையில் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் தமிழ்ச் சுவடிகளையும் அரிய நூல்களையும் மின் வடிவில் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

தமிழ் வளர்த்த ஆதினங்கள், கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், தமிழ்ச் சங்கங்கள், தனியார் சேமிப்புகள் முதலான ஆதாரங்களிலிருந்து பழைய அரிய நூல்களையும் சுவடிகளையும் மின்வடிவில் கொண்டுவருகிறோம். அவற்றை இந்தத் தளத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதனால் தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் சங்க இலக்கியச் சுவடிகள், இலக்கணச் சுவடிகள் முதலான பல சுவடிகளையும் பார்வையிடும் வாய்ப்பினைத் தருவதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மகிழ்கிறது. பாடபேத ஆய்விற்கும் புதிய சுவடிப் பதிப்பிற்கும் இந்த முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறோம். சுவடிகளின் மின்வடிவப் பாதுகாப்பிற்கு உதவிய நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் எங்களது நன்றி.

- மின்னணுச் சுவடிக் காட்சியகக் குழு