பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

பாவேந்தர் பாரதிதாசன்
125ஆவது பிறந்தநாள் விழா (29.04.2015)
இணையதளம்

புதியதோர் உலகம் செய்வோம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். பொருளுக்காக ஆட்களைப் பாடுவோரும், பொழுது போக்கிற்காக இயற்கையைப் பாடுவோரும், போலிப் புகழுக்காக எதையும் பாடுவோரும் மலிந்திருந்த கவிதை உலகில், கொள்கையைப் பாடுவோராகவும், மக்கள் நலவாழ்வைப் பாடுவோராகவும் சமுதாய மலர்ச்சியைப் பாடுவோராகவும் விளங்கியவர் பாவேந்தர். பாவேந்தரின் படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம் பெறத்தக்க பெருமை உடையவை. இயற்கையைப் பாடி இறவாப் புகழ்பெற்ற கீட்சு, செல்லி போன்ற ஆங்கிலக் கவிஞர்கட்கு இணையானவர் என்பதைக் காட்டிலும், இயற்கையின் அழகுக் கூறுகளைப் பாடும்போதும் மக்கள் நலனையே மனதில் கொண்டு பாடும் பாங்கால் அவர்களினும் பாவேந்தர் உயர்ந்து காணப்படுகின்றார். பாவேந்தர் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச் சென்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞர். இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் பாவேந்தர்.
மேலும் படிக்க ...