பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைக் கல்வி மற்றும் இணையவழிக்கல்வி மையத்தில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற மாணவ மாணவிகளுக்கு 15-11-2026 முதல் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 15-11-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அரசுத் தேர்வுகள் நடைபெறுவதால், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய நேரடி பயிற்சி மையங்களில் (PCP Centres) நடைபெறவுள்ள நேரடி பயிற்சி வகுப்புகள் (அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்) நடைபெறாது என்பதை தொடர்புடைய மாணவ மாணவிகளுக்கு கனிவுடன் தெரிவிக்கப்படுகிறது.